சாம்பியன்ஸ் லீக் காற்பந்து: யுனைடெட், லிவர்பூல் குழு ரசிகர்களுக்கு ரஷ்ய போலிசார் எச்சரிக்கை

சாம்பியன்ஸ் லீக் காற்பந்து: யுனைடெட், லிவர்பூல் குழு ரசிகர்களுக்கு ரஷ்ய போலிசார் எச்சரிக்கை

1 mins read

மாஸ்கோ: சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இவ்வாரம் தொடர் கிறது ஐரோப்பிய குழுக்களுக்கான சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டி. அவற்றில் இங்கிலாந்தின் மான் செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் குழுக்களின் ரசிகர்களுக்கு எச் சரிக்கை விடுத்துள்ளனர் ரஷ்ய போலிசார். இரு குழுக்களுமே ரஷ்ய குழுக்களை எதிர்த்து இவ்வாரம் சாம் பியன்ஸ் லீக் தகுதிச் சுற்று ஆட்டங்களில் விளையாடுகின் றன. லிவர்பூல் குழு ஏற்கெனவே நேற்று பின்னிரவு ஸ்பார்டக், மாஸ்கோ குழுவை எதிர்த்து விளையாடியது. இன்று பின்னிரவு யுனைடெட் குழு சிஎஸ்கேஏ மாஸ்கோ குழுவை எதிர்த்து விளையாடு கிறது. இந்நிலையில் இரு இங்கிலாந்து குழுக்களிலிருந்தும் மொத்தம் 2,000 ரசிர்கள் தத்தம் குழுக் களுக்கு ஆதரவாக ரஷ்யாவுக்குச் சென்றுள்ளனர். இங்கிலாந்து, ரஷ்ய காற்பந்து ரசிகர்கள் வன்முறைக்குப் பெயர் போனவர்கள். இரு தரப்பினரும் எளிதில் தள்ளு முள்ளு, அடிதடியில் இறங்கக்கூடியவர்கள்.