ஸ்பர்ஸ் குழுவை நெருங்கும் ஆர்சனல்

ஸ்பர்ஸ் குழுவை நெருங்கும் ஆர்சனல்

1 mins read
18676b21-2a84-4daa-ba76-c16682d800b8
-

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துத் தொடரில் வெஸ்ட் பிரோம் குழுவை 2 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சனல். இதன் மூலம் எமிரேட்ஸ் அரங் கில் நடந்த மூன்று பிரிமியர் லீக் ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடியுள்ளது ஆர் சனல் குழு. ஆர்சனலின் சொந்த மண்ணில் நடந்த ஆட்டங்களில் கோல் புகுத்திய அதன் புதிய ஆட்டக் காரரான அலெக்ஸாண்ட்ரே லாசட்டெட் தான் நேற்றைய ஆட்டத்திலும் தனது குழுவுக்காக இரண்டு கோல்களைப் போட்டார். 20வது நிமிடத்தில் அவர் முதல் கோலைப் புகுத்தினார். ஆனால், அதற்கு முன்னதாக கிடைத்த 'ஃபிரீ-கிக்' வாய்ப்பைப் பயன் படுத்தி ஆர்சனலின் அலெக்சிஸ் சான்சிஸ் உதைத்தப் பந்தை தடுத்துவிட்டார் வெஸ்ட் பிரோம் கோல்காப்பாளர் பென் ஃபோஸ்டர். ஆர்சனல் வீரர் ஷ்கோதரன் முஸ்தபியின் தப்பாட்டம் கார ணமாக வெஸ்ட் பிரோம் குழுவிற்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று எண்ணுவதாக கேரத் பேரி கூறினார்.

ஆர்சனலின் இரண்டு கோல்களையும் அதன் புதிய ஆட்டக்காரரான அலெக்ஸாண்ட்ரே லாசட்டெட் (சிவப்பு சட்டை) புகுத்தினார். படம்: ராய்ட்டர்ஸ்