சாதிக்க துடிக்கும் இந்தியா

சாதிக்க துடிக்கும் இந்தியா

1 mins read

பெங்களுரு: கிரிக்கெட் உலகில் இதுவரை இந்திய அணி சாதிக் காத ஒன்றைச் சாதிக்கும் முனைப் பில் இன்று ஆஸ்திரேலியாவை நான்காவது ஒருநாள் போட்டியில் எதிர்கொள்கிறது. இதுவரை தொடர்ச்சியாக ஒன்பது ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று வந்துள்ள இந்திய அணி, பத்தாவது போட்டியையும் வென்று சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளது. ஏற்கெனவே நியூசிலாந்து, இங் கிலாந்து அணிகள் ஒருமுறையும் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் இருமுறையும் இந்தச் சாதனையை எட்டியுள்ளன. தென் ஆப்பிரிக்கா ஐந்து முறையும் ஆஸ்திரேலியா ஆறு முறையும் செய்த இந்தச் சாத னையை இதுவரை இந்திய அணி எட்டியது இல்லை. பெங்களுரு மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இந்தப் போட்டி இந்திய அணிக்கு 926வது ஒருநாள் போட்டியாகும். இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி சாதனை படைக்க வாய்ப்புள்ளது.