லண்டன்: இங்கிலாந்து கிரிக் கெட் அணியின் முன்னணி 'ஆல் ரவுண்டர்' பென் ஸ்டோக்ஸ் கடந்த திங்கட் கிழமை பிரிஸ்டோனில் ஒரு நபரைத் தாக்கியதாகக் கூறப் படும் சம்பவத்தால், நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அவரு டன் சென்ற மற்றொரு வீரர் ஹேல்ஸும் அணியில் இடம் பெறவில்லை. முன்னதாக, சந்தேகத்தின் பேரில் ஸ்டோக்ஸை அழைத்துச் சென்ற போலிசார், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவரை விடுவித்துவிட்டனர். இந்நிலையில், ஆஸ்திரேலி யாவுக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப் பட்டது. 16 பேர் கொண்ட அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக்ஸ்
1 mins read

