மும்பை: இந்திய கிரிக்கெட் வாரிய பொதுமேலாளர் எம்.வி.ஸ்ரீதர் பதவி விலகியுள்ளார். உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிர்வாகக் குழு இந்த பதவி விலகலை ஏற்றுக்கொண்டுள்ளது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த போது நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஸ்ரீதர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பிசிசிஐ பொதுமேலாளரான பிறகும் ஸ்ரீதர் ஹைதராபாத்திலேயே தங்கியிருந்தார். அலுவல் நடவடிக்கைகளுக்காக அவர் அவ்வப்போது மும்பை வந்து சென்று வந்தார். ஆனால் ஸ்ரீதர் மும்பையிலேயே தங்கியிருக்க பிசிசிஐ விரும்பியது. இரட்டை விருப்பங்கள் அடிப்படையில் ஸ்ரீதர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டதால் பிசிசிஐ பொது மேலாளர் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளார். புதிய பொதுமேலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, இப்பொறுப்பைக் கூடுதலாக கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ பொது மேலாளர் பதவி விலகல்
1 mins read

