கோஹ்லியை முந்திய வார்னர்; 100வது போட்டியில் சதம்

கோஹ்லியை முந்திய வார்னர்; 100வது போட்டியில் சதம்

1 mins read
6f16adf4-529e-4a93-9816-b56bd0b8dd2d
-

பெங்களுரு: ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது நூறாவது போட்டியில் சதம் அடித்து அசத்தியதோடு அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார். பெங்களூரில் நேற்று நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கிய வார்னருக்கு இது நூறாவது போட்டி. தனது 14வது ஒருநாள் சதத்தை விளாசிய வார்னர் 119 பந்துகளில் 124 ஓட்டங்கள் எடுத்து ஆஸ்திரேய அணிக்கு வலுவான தொடக்கத்தைக் கொடுத்தார். 100வது போட்டியில் சதம் கண்ட ஒரே ஆஸ்திரேலிய வீரரான வார்னர். ஒட்டு மொத்தமாக 100வது போட்டியில் சதம் காணும் 8வது வீரராகிறார். இதுதவிர ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் இந்திய அணித் தலைவர் கோஹ்லியை அவர் முந்தியுள்ளார்.

அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்த வார்னர். படம்: ஏஎஃப்பி