'அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவது கிட்டதட்ட உறுதி'

'அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவது கிட்டதட்ட உறுதி'

1 mins read
c84fe13a-99b3-48fb-abed-d9d64686dd44
-

மாஸ்கோ: மான்செஸ்டர் யுனை டெட் காற்பந்துக் குழு, சிஎஸ்கேஏ மாஸ்கோ குழுவை மூன்று கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி யது. இந்த வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் லீக்கின் 'நாக் அவுட்' சுற்றுக்கு யுனைடெட் குழு தகுதி பெறுவது கிட்டதட்ட உறுதியாகி விட்டதாக கூறினார் அக்குழு வின் நிர்வாகி மொரின்யோ. "சாம்பியன்ஸ் லீக்கில் இதுவரை நடந்த இரண்டு ஆட் டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஆறு புள்ளிகள் பெற்று உள்ளோம். "இன்னும் நான்கு போட்டிகள் விளையாட வேண்டியுள்ளது. ஆனால் இதுவொரு நல்ல தொடக்கம்," என்றார் யுனைடெட் நிர்வாகி மொரின்யோ. எதிரணி மண்ணில் கடைசியாக நடந்த 10 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது மேன்யூ. ஆனால் நேற்றைய போட்டியின் முதல் 18 நிமிடங்களிலேயே இரண்டு கோல்களைப் புகுத்தியதால் மேன்யூவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தது. லுகாகு நான்காவது நிமிடத்திலேயே முதல் கோலைப் போட்டார். அதன் பிறகு 18வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன் படுத்தி அடுத்த கோலைப் புகுத்தினார் ஆண்டனி மார்சியல். 26வது நிமிடத்தில் லுகாகு மீண்டும் ஒரு கோலைப் போட்டார்.

மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்காக இதுவரை ஒன்பது ஆட்டங்களில் விளையாடியுள்ள ரொமேலு லுகாகு பத்து கோல்களைப் புகுத்தியுள்ளார். படம்: ஏஎஃப்பி