ரோனல்ட் கூமனுக்குத் தொடரும் நெருக்குதல்

ரோனல்ட் கூமனுக்குத் தொடரும் நெருக்குதல்

1 mins read
5ef7fe53-1447-4f78-a056-4df33f6e40e8
-

லண்டன்: இன்றிரவு நடைபெறும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் பர்ன்லியைச் சந்திக்கிறது எவர்ட்டன். எவர்ட்டன் இதுவரை ஆறு ஆட்டங்களில் களமிறங்கியுள்ளது. அவற்றில் மூன்று ஆட்டங்களில் தோல்வியைத் தழுவி ஏழு புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது. இதனால் லீக் பட்டியலில் 14வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், எவர்ட்டனின் நிர்வாகியாக ரோனல்ட் கூமன் தொடர்வது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. கடந்த வியாழக்கிழமையன்று எவர்ட்டனின் குடிசன் பார்க் விளை யாட்டரங்கத்தில் யூரோப்பா லீக் ஆட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் சைப்ரஸ் குழுவான அப்போலோன் லிமாசோலுடன் 2=2 எனும் கோல் கணக்கில் எவர்ட்டன் சமநிலை கண்டது. எளிதில் வெற்றி பெறக்கூடிய ஆட்டத்தில் எவர்ட்டன் சமநிலை கண்டதால் அக்குழுவின் ரசிகர்கள் ஆத்திரமடைந்து கூமனுக்கு எதிராக முழக்கமிட்டனர். கடந்த வாரயிறுதியில் போர்ன்மத் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தபோதிலும் அது போதாது என்று கூமன் தெரிவித்துள்ளார். ரசிகர்களின் நம்பிக்கையைப் பெற பர்ன்லிக்கு எதிராக இன்று நடைபெறும் ஆட்டத்தைக் கைப்பற்றவேண்டும் என்றார் அவர்.