இங்கிலாந்திடம் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி

இங்கிலாந்திடம் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி

1 mins read
7a58654b-f925-4332-b079-aa17a5ce201b
-

லண்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டெஸ்ட், ஒரு டி20, ஐந்து ஒருநாள் போட்டிகள் ஆகியவை கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரில் 2=1 என்ற கணக்கில் இங்கிலாந்தும் டி20ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. முன்னதாக நடைபெற்ற நான்கு ஒருநாள் போட்டிகளில் 3=0 என்ற கணக்கில் இங்கிலாந்து ஏற்கெ னவே தொடரைக் கைப்பற்றி விட்டது. இந்நிலையில், ஐந்தாவது ஒருநாள் போட்டி சவுத்ஹேம்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்தடித்தது. கிறிஸ் கெய்ல் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஷாய் ஹோப் 72 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.