மலேசிய எஃப்1: முதல் இடத்திலிருந்து தொடங்க இருக்கும் ஹேமில்டன்

மலேசிய எஃப்1: முதல் இடத்திலிருந்து தொடங்க இருக்கும் ஹேமில்டன்

1 mins read
58f11ea7-6480-401c-a245-5999a52caf02
-

கோலாலம்பூர்: இன்று நடைபெறும் மலேசிய எஃப்1 கார் பந்தயத்தை முதல் இடத்திலிருந்து தொடங்க இருக்கிறார் மெர்செடிஸ் அணியின் லுவிஸ் ஹேமில்டன் (நடுவில்). ஃபெராரி அணியின் கிமி ரைக்கோனன் (வலது) இரண்டாவது இடத்திலிருந்து பந்தயத்தைத் தொடங்குவார். ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் (இடது) மூன்றாவது இடத்திலிருந்து பந்தயத்தைத் தொடங்குவார். தகுதிச் சுற்றில் பந்தயத்தை முடிக்கத் தவறிய செபாஸ்டியன் வெட்டல் இறுதி இடத்திலிருந்து பந்தயத்தைத் தொடங்க இருக்கிறார். இது அவரது வெற்றியாளர் பட்டக் கனவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாகக் கருதப்படுகிறது.