கோலாலம்பூர்: மலேசியாவின் செப்பாங் பந்தயத்தடத்தில் நேற்று நடைபெற்ற எஃப்1 கார் பந்தயத்தில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் வாகை சூடினார். இரண்டாவது இடத்திலிருந்து பந்தயத்தைத் தொடங்கிய 20 வயது வெர்ஸ்டப்பன் முதலிடம் பிடித்தார். எஃப்1 பந்தயத்தை வெர்ஸ் டப்பன் கைப்பற்றுவது இது இரண்டாவது முறை. இரண்டாவது இடத்திலிருந்து பந்தயத்தைத் தொடங்க இருந்த ஃபெராரியின் கிமி ரைக்கோனனின் காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவருக்குப் பதிலாக மூன்றாவது இடத்திலிருந்து தொடங்க இருந்த வெர்ஸ்டப்பன் இரண்டாவது இடத்திலிருந்து தொடங்கினார். மெர்செடிஸ் அணியின் லுவிஸ் ஹேமில்டன் இரண்டாவதாக வந்தார். ரெட் புல் அணியின் மற்றொருவீரரான டேனியல் ரிக்கார்டோ மூன்றாவது இடத்தைப் பிடித்தார். கடைசி இடத்திலிருந்து பந்தயத்தை ஆரம்பித்த செபாஸ் டியன் வெட்டல் நான்காவது இடத் தைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்.
வெற்றியைக் கொண்டாடும் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் (இடது). அவருடன் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக். படம்: ஏஎஃப்பி

