பிடிவாதமாக நின்ற நியூகாசல் தற்காப்பு அரண்

பிடிவாதமாக நின்ற நியூகாசல் தற்காப்பு அரண்

2 mins read
7f96dc57-7f8b-46fd-b8c0-79024ded234b
-

நியூகாசல்: நேற்று அதிகாலை நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் நியூகாசலும் லிவர்பூலும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன. இந்த ஆட்டம் நியூகாசலின் செயிண்ட் ஜேம்சஸ் பார்க் விளை யாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதன் விளைவாக லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் மான்செஸ்டர் சிட்டியைவிட லிவர்பூல் ஏழு புள்ளிகள் குறை வாகப் பெற்று 12 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. நியூகாசல் பத்து புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து பல தாக்குதல்களை லிவர்பூல் நடத்தியும் கோல் போட முடியாமல் அது தவித்தது.

இந்நிலையில், ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் லிவர்பூல் கோல் போட்டது. நியூகாசலின் கோல் வலை யிலிருந்து ஏறத்தாழ 25 மீட்டர் தூரத்தில் இருந்த லிவர்பூலின் ஃபிலிப் கோட்டின்யோ வலை நோக்கி பந்தை அனுப்பினார். பந்து மின்னல் வேகத்தில் நியூகாசல் கோல்காப்பாளரைக் கடந்து சென்று வலைக்குள் புகுந்தது. ஆனால் லிவர்பூலின் சாதக நிலை நீடிக்கவில்லை. ஏழு நிமிடங்கள் கழித்து நியூகாசல் ஆட்டத்தைச் சமன் செய்தது. லிவர்பூலின் தற்காப்பில் ஏற்பட்ட கவனக்குறைவைப் பயன் படுத்தி நியூகாசலின் ஹொசேலு பந்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வலை நோக்கி விரைந்தார். அவரிடமிருந்து பந்தைப் பறிக்க லிவர்பூல் தற்காப்பு ஆட்டக்காரர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

நியூகாசலின் ஹொசேலுவிடம் (இடது) இருந்து பந்தைப் பறிக்க லிவர்பூல் ஆட்டக்காரர் முயன்றபோது பந்து ஹொசேலுவின் காலில் பட்டு வலைக்குள் புகுந்தது. அதனைத் தொடர்ந்து லிவர்பூல் எவ்வளவு முயன்றும் வெற்றி கோலைப் போட முடியாமல் போனது. படம்: ராய்ட்டர்ஸ்