பங்ளாதேஷை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி டர்பன்: தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பங்ளாதேஷ் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டி20 போட்டிகள் ஆகியவை கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. தென்னாப்பிரிக்கா முதலில் பந்தடித்தது. எல்கர், ஆம்லா ஆகியோர் சதமடித்தனர். 199 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்த எல்கர் இரட்டை சதத்தைத் தவறவிட்டார். இதனைத் தொடர்ந்து, 146 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 496 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி 'டிக்ளேர்' செய்தது.
பங்ளாதேஷை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி டர்பன்:
1 mins read

