மும்பை: இந்தியா-ஆஸ்தி ரேலியா அணிகள் மோதிய ஐந்து ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இத்தொடரி லிருந்து இந்தியாவின் தொடக்க பந்தடிப்பாளர் ஷிகர் தவான் விலகியிருந்தார். தமது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் போட்டியில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவுடன் ரகானே தொடக்க வீரராகக் களம் இறங்கினார். அவர் ஐந்து ஆட்டங்களில் 244 ஓட்டங்கள் எடுத்தார். தொடர்ச் சியாக நான்கு அரைசதங்கள் அடித்தார். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஒருநாள் போட்டி தொடரில் அசத்திய ரகானே நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய டி20 அணியிலிருந்து ரகானே நீக்கம்
1 mins read

