காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் இங்கிலாந்தும் ஸ்லோவேனி யாவும் நாளை மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தின் வெம்பிளி விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமையன்று லித்து வேனியாவுடன் இங்கிலாந்து மோதுகிறது. இவை இங்கிலாந்தின் கடைசி இரண்டு தகுதிச் சுற்று ஆட்டங்கள். அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற இங்கிலாந்துக்கு இரண்டு புள்ளிகள் மட்டுமே தேவைப்படு கின்றன 'எஃப்' பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து குழு 20 புள்ளிகளுடன் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
வெற்றியைச் சுவைக்க ரேஷ்ஃபர்ட் ஆவல்
1 mins read

