துபாய்: அனைத்துலகக் கிரிக்கெட் மன்றம் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் பந்தடிப்பாளர்களின் முதல் ஆறு பேரில் மாற்றமில்ல. ஆஸ்திரேலிய அ°த் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் (936 புள்ளி) முதலிடத்திலும் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும் (889 புள்ளி), நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் மூன்றாவது இடத்திலும் இந்திய வீரர் புஜாரா நான்காவது இடத்திலும் ஆஸ்திரேலிய அணியின் துணைத் தலைவர் டேவிட் வார்னர் ஐந்தாவது இடத்திலலும் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆறாவது இடத்திலும் (806 புள்ளி) நீடிக்கிறார்கள். தென்னாப்பிரிக்க வீரர் ஆம்லா ஒரு இடம் முன்னேறி 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தரவரிசையில் 6வது இடத்தைத் தக்க வைத்துக்கொண்டார் விராத் கோஹ்லி
1 mins read

