புதுடெல்லி: ஆஸ்திரேலிய கிரிக்- கெட் வீரர்கள் தங்களுக்கே உரித்- தான, வம்புக்கு இழுத்து வாக்கு வாதம் செய்யும் உத்தியை இந்திய அணியினருடன் தொடுக்கப் பயப் படுவது ஏன் என்பது குறித்து சேவாக் (படம்) புதிய தகவலை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்- துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1=4 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெறுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி ராஞ் சியில் வருகிற 7ஆம் தேதி நடக்- கிறது. எப்போதும் களத்தில் அதிரடி- யாகச் செயல்படும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள், எதிரணியினரை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து, வாக்குவாதம் செய்யும் ஓர் உத்தியை அடிக்கடி கடை பிடிப்பது உண்டு.
இவ்வாறு செய்யும்போது, நன்- றாக பந்தடித்துக் கொண்டிருக்கும் வீரர் கூட கோபத்தில் விக்கெட்டை இழந்து விடுவது உண்டு. 'ஸ்லெட்ஜிங்' எனப்படும் இந்தச் சீண்டுதல் பாணியை இந் திய தொடரில் அதிகமாக பார்க்க முடியவில்லை. அது ஏன் என்பது குறித்து இந்திய முன்னாள் அதி- ரடி ஆட்டக்காரர் சேவாக் 'திடுக்' செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். சேவாக் அளித்த பேட்டியில், "அடுத்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலம் நடைபெறுகிறது. இதை மனதில் வைத்துத்தான் ஆஸ் திரேலிய வீரர்கள், இந்திய அணியினருடன் வம்பிழுக்க அஞ்சுகின்றனர். இந்த ஒரு நாள் தொடரில் அவர்களில் யாராவது தேவையில் லாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கி இருந்தால், குறிப்பிட்ட அந்த வீரரை ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் ஏலத்தில் தேர்வு செய்ய ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள். இது தான் அவர்கள் இந்திய அணியினருடன் மோதல் போக்கில் ஈடுபடாததற்கு முக்கிய காரணமாகும்," என்றார்.

