கத்தாரிடம் சிங்கப்பூர் தோல்வி

கத்தாரிடம் சிங்கப்பூர் தோல்வி

1 mins read

சிங்கப்பூர்: அனைத்துலக நட்பு முறை காற்பந்து ஆட்டத்தில் கத்தார் குழுவிடம் 3=1 எனத் தோல்வி அடைந்தது சிங்கப்பூர் குழு. அதன் பிறகு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய சிங்கப்பூர் குழுவின் தலைமை பயிற்றுவிப்பாளர் வி.சுந்தரமூர்த்தி, "விளையாட்டாளர்களைத் தேர்வு செய்யும் வகையில் கைவசம் நிறைய நல்ல விளையாட்டாளர்கள் உள்ளனர். இந்த ஆட்டத்தின் மூலம் யார் தயார் உள்ளார்கள். யார் தயாராக இல்லை என்பது பற்றி தெரிநிது கொண்டேன்," என்றார். கவனக்குறைவால் கத்தார் குழுவிற்கு இரண்டு கோல்கள் சாதகமாக அமைந்துவிட்டன, இல்லையென்றால் ஆட்டம் சமநிலையில் முடிந்திருக்கலாம் என்றும் அவர் சொன்னார். வரும் செவ்வாய்க்கிழமை நடை பெறவுள்ள ஆசிய கிண்ணத் தகுதிச் சுற்றில் துர்கமேனிஸ்தான் குழுவை எதிர்கொள்கிறது சிங்கப் பூர். அதற்கு முன்னதாக ஒத்திகை யாக நட்புமுறை ஆட்டம் நடை பெற்றது.