ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவது சந்தேகம்

ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவது சந்தேகம்

1 mins read
c72af4c9-73dc-46f7-9725-9cd636df9abe
-

ராஞ்சி: இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி தலைவர் ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. இன்று நடைபெறவுள்ள இப் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஸ்மித்திற்கு காயம் ஏற்பட்டதால் அவர் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்திய அணியின் மூத்த வீரரான ஆ‌ஷிஸ் நெஹ்ரா அணிக்குத் திரும்பி யுள்ளதை பும்ரா மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து பும்ரா கூறுகையில், "நெஹ்ரா மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அவருடன் சில போட்டிகளில் விளையாடியுள்ளேன். "டி20 உலகக் கிண்ணத்தில் அவருடன் இணைந்து பந்து வீசியுள்ளேன்.

"அணியில் இருப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். அவர் ஏராளமான அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். "என்னைப் போன்ற இளைஞர் களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார். இந்திய அணிக்கு அவர் வந்துவிட்டால் சூழ்நிலைச் சிறப் பானதாக மாறிவிடும். அவர் மீண்டும் அணிக்குத் திரும்பியதை சிறந்ததாக உணர்கிறேன்," என்றார். ஆனால், இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹானே சேர்க்கப்பட வில்லை. இது பல்வேறு தரப்பில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் கவாஸ்கர், "ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டித் தொடரில், ரஹானே தொடர்ந்து நான்கு அரை சதம் அடித்துச் சிறப்பாக ஆடினார். அவரை 20 ஓவர் போட்டியில் சேர்க்காதது ஏன் என்று தெரிய வில்லை.

ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித். கோப்புப் படம்