அர்ஜெண்டினா: காற்பந்தில் இரண்டு முறை உலகக் கிண்ணம் வென்ற அர்ஜெண்டினா, இம்முறை உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெற முடியாமல் போகும் அபாயத்தில் உள்ளது. வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற் போது நடைபெற்று வருகின்றன. நேற்று காலை நடந்த தகுதிச் சுற்றுப் போட்டி ஒன்றில் பெருவிடம் 0=0 என்ற கோல் கணக்கில் சமநிலை மட்டுமே கண்டது அர் ஜெண்டினா. இதனால் தென் அமெரிக்க பிரிவு பட்டியலில் அர்ஜெண்டினா ஆறாவது இடத்தில் உள்ளது. எக்வேடார் குழுவிற்கு எதிரான ஒரேயொரு ஆட்டம் மட்டுமே அர் ஜெண்டினாவிற்கு எஞ்சி உள்ள நிலையில், நேரடியாக உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் அக்குழு ஏற்கெனவே இழந்துவிட்டது. 11ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் வெற்றி பெற் றால் தான் அக்குழுவால் பட்டிய லில் ஐந்தாவது இடத்தையாவது பிடிக்க முடியும். அப்போது தான் 'பிளே ஆப்' சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.
அர்ஜெண்டினா குழுவின் மெஸ்சியிடம் இருந்து பந்தைத் தட்டிப் பறிக்கும் பெரு வீரர்கள். படம்: ஏஎஃப்பி

