தோக்கியோ: எஃப்1 கார் பந்தய வெற்றியாளர் பட்டத்தை நான்கா வது முறையாக வெல்லும் வெற்றிப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறார் லுவிஸ் ஹேமில்டன். எந்திரக் கோளாறு காரணமாக ஃபெராரியின் செபாஸ்டியன் வெட் டல் தொடக்கத்திலேயே வெளி யேறிய நிலையில், ஜப்பான் எஃப்1 கார் பந்தயத்தில் வெற்றி பெற்றார் மெர்சிடிஸ் வீரர் ஹேமில்டன். ரெட் புல் வீரர்களான மேக்ஸ் வெர்ஸ்டப்பன் இரண்டாவது இடத் தையும் டேனியல் ரிகார்டியோ மூன்றாவது இடத்தையும் பிடித்த னர். இன்னும் நான்கு சுற்றுகளே மீதமுள்ள நிலையில், வெட்டலை விட 59 புள்ளிகள் கூடுதலாக எடுத்துள்ளார் ஹேமில்டன். வரும் 22ஆம் தேதி நடை பெறவுள்ள அமெரிக்க கார் பந்த யத்தில் ஹேமில்டன் வெற்றி பெற்று, வெட்டல் நான்காவது இடத்திற்கும் கீழ் தள்ளப்பட்டால் இவ்வாண்டுக்கான பட்டம் ஹேமில்டன் வசமாகிவிடும்.
பட்டம் வெல்லும் வெற்றிப் பாதையில் ஹேமில்டன்
1 mins read
-

