வேல்ஸ் குழுவின் உலகக் கிண்ணக் காற்பந்து வாய்ப்பை பறித்தது அயர்லாந்து

வேல்ஸ் குழுவின் உலகக் கிண்ணக் காற்பந்து வாய்ப்பை பறித்தது அயர்லாந்து

1 mins read
0bbeee02-f08a-4fa6-bd3d-4f268e91df26
-

வேல்ஸ்: வேல்ஸ் குழுவை வீழ்த்தி 'பிளே ஆஃப்' சுற்றுக்குத் தகுதி பெற்றது அயர்லாந்து குழு. இதனால் உலகக் கிண்ணக் காற்பந்திற்குள் நுழையும் வேல்ஸ் குழுவின் கனவு தவிடு பொடி யானது. தனது சொந்த மண்ணில் நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியை கட்டுக்குள் வைத்திருந் தது வேல்ஸ் குழு. ஆனால் எதிரணியின் தற்காப்பு ஆட்டத்தால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பிற்பாதி ஆட்டத்தின் போது அயர்லாந்து குழுவின் நம்பிக்கை அதிகரித்திருந்தது. வேல்ஸ் குழுத் தலைவர் ஆஷ்லே வில்லியம்சிடம் இருந்து ஜெஃப் ஹென்ரிக் தட்டிப் பறித்தப் பந்தைக் கோலாக மாற்றினார் மெக் கிளின். 57வது நிமிடத்தில் அவர் புகுத்திய கோலைச் சமன் செய்ய முயன்றது வேல்ஸ்.

அயர்லாந்தின் மெக் கிளினிடம் இருந்து பந்தைத் தட்டிப் பறிக்கப் போராடும் வேல்ஸ் குழுவின் ஜேம்ஸ் செஸ்டர் (இடது). படம்: ஏஎஃப்பி