சரிவிலிருந்து மீட்ட சந்திமால்

சரிவிலிருந்து மீட்ட சந்திமால்

1 mins read

அபுதாபி: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் சதம் விளாச, அந்த அணி முதல் இன்னிங்சில் 419 ஓட்டங்களைக் குவித்தது. இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. முதல் நாள் முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களை எடுத்திருந்தது. நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது. டிக்வெல்லா 83 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஹசன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்வரிசை ஆட்டக்காரர்களில் தில்ருவான் பெரேரா (33) சற்று நிலைத்து ஆடினார். இறுதியில் இலங்கை அணி 419 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. சந்திமால் 155 ஓட்டங்களுடன் இறுதி வரை களத்தில் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா, ஹசன் அலி ஆகியோர் ஆளுக்கு இரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.