கோலாலம்பூர்: மலேசிய தேசிய முக்குளிப்புப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் அடுத்த ஒலிம்பிக் போட்டி களுக்காகப் பயிற்சி பெற்றுவரும் ஒரு வீராங்கனையைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கோலாலம்பூரில் உள்ள தேசிய நீர் விளையாட்டு மையத்தில் ஹுவாங் சியாங் என்ற அந்தப் பயிற்றுவிப்பாளர் கடந்த மாதம் அந்த 20 வயதுப் பெண்ணுடன் பாலியல் வல்லுறவு கொண்டதாக கூறப்பட்டது. இருந்தாலும், இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை 35 வயதான சியாங் மறுத்ததாக அவரது வழக் கறிஞர் தெரிவித்தார். சீனாவில் பிறந்து, மலேசியக் குடியுரிமை பெற்றவரும் இரு பிள்ளைகளுக்குத் தந்தையுமான சியாங், 2000ல் சிட்னியில் நடந்த முக்குளிப்பு உலகக் கிண்ணப் போட்டிகளில் தங்கம் வென்றவர். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மலேசியப் பயிற்றுவிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு
1 mins read

