இந்தப் பருவத்தின் இறுதித் தொடராக சிங்கப்பூரில் நடக்கும் 'டபிள்யூடிஏ ஃபைனல்ஸ்' போட் டிகளில் களமிறங்கும் எட்டாவது, இறுதிப் போட்டியாளராகத் தேர்வு பெற்றுள்ளார் பிரான்ஸ் நாட்டின் கேரலைன் கார்சியா. மாஸ்கோவில் நடந்துவரும் கிரெம்ளின் கிண்ணப் போட்டி யில் இருந்து காயம் காரணமாக பிரிட்டனின் ஜோகனா கோன்டா விலகியதை அடுத்து அவ்வாய்ப்பு கார்சியாவுக்குக் கிட்டியது.
சீனாவின் வுஹான், பெய்ஜிங் நகரங்களில் அண்மையில் நடந்த போட்டிகளில் பட்டம் வென்றிருந் தார் கார்சியா. பெய்ஜிங் பொது விருதுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப்பை அவர் வீழ்த்தினார். "டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் போட்டிகளுக்குத் தேர்வாகியிருப் பதால் உலகமே என் கைகளில் வந்துவிட்டதாக உணர்கிறேன்," என்ற கார்சியா, உலகின் முன் னணி எட்டு வீராங்கனைகளில் ஒருவராக இருப்பதை எண்ணித் தான் பெருமிதம் கொள்வதாகவும் கூறினார்.
சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் 'டபிள்யூடிஏ டென்னிஸ் ஃபைனல்ஸ்' போட்டிகளில் களமிறங்கவிருக்கும் பிரெஞ்சு வீராங்கனை கேரலைன் கார்சியா. படம்: ஏஎஃப்பி

