லிவர்பூல்: உலகக் கிண்ணக் காற் பந்துத் தகுதிச் சுற்று ஆட்டங்களில் விளையாட வேண்டியிருந்ததால் இரு வார இடைவெளிக்குப் பிறகு இவ்வார இறுதியில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டிகள் மீண்டும் களைகட்டவுள்ளன. சிங்கப்பூர் நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பரம எதிரிகளான லிவர்பூல் = மான்செஸ்டர் யுனை டெட்- குழுக்கள் மோதுகின்றன. இந்தப் பருவத்தில் இதுவரை ஏழு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் மான்செஸ்டர் சிட்டி குழுவைப் போலவே 19 புள்ளி களைப் பெற்று இருந்தாலும் கோல் வித்தியாசத்தில் யுனைடெட் இரண்டாம் நிலையில் நீடிக்கிறது. மாறாக, மூன்று ஆட்டங்களில் மட்டும் வென்ற லிவர்பூல் 12 புள்ளிகளுடன் ஏழாமிடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் அரங்கில் அக் குழுவை எதிர்கொண்டாலும் தமது குழு எதையும் நிரூபிக்கத் தேவை இல்லை என்று அலட்சியமாகக் கூறியுள்ளார் யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்யோ. அதே நேரத்தில், கடந்த பரு வத்தில் இருந்ததைவிட இப்பருவத் தில் யுனைடெட் வீரர்கள் நன்கு ஆயத்தமாகி இருப்பதாகக் கூறி லிவர்பூல் குழுவிற்கு அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதுவரை நடந்த ஏழு ஆட்டங் களில் யுனைடெட் ஆறில் வென்று இருந்தாலும் அதில் இரு குழுக்கள் மட்டுமே கடந்த முறை பட்டியலில் பத்தாம் இடத்திற்குள் முடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

