ஆசிய கிண்ணக் காற்பந்து 2019: இந்திய அணி தகுதி

ஆசிய கிண்ணக் காற்பந்து 2019: இந்திய அணி தகுதி

1 mins read
0ea171b6-184a-4b7d-a13a-4cd2458a9316
-

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் 2019ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஆசிய கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்த தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் மக்காவ் அணியை வீழ்த்தியது. ரௌலின் போர்கஸ், அணித்தலைவர் சுனில் சேத்ரி (வலமிருந்து 2வது), லால்பெக்லுவா ஆகியோர் இந்திய அணிக்காக ஆளுக்கு ஒரு கோலை அடித்தனர். மக்காவ் ஆட்டக்காரர் லாம் செங் சொந்த கோல் அடித்ததால் இந்திய அணியின் கோல் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. தகுதிச் சுற்று ஆட்டங்களில் இந்திய அணிக்குக் கிட்டிய தொடர்ச்சியான நான்காவது வெற்றி இது. இதையடுத்து, இந்திய அணி மொத்தம் 12 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. படம்: ஏஎஃப்பி