புதுடெல்லி: 17 வயதுக்குட்பட் டோருக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் போட்டியை ஏற்று நடத்தும் இந்தியா அதன் கடைசி முதல் சுற்று ஆட்டத்தில் கானாவிடம் 4=0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந் துள்ளது. இதன் விளைவாக இந்தியா போட்டியிலிருந்து வெளியேறி உள்ளது. ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் கானாவின் எரிக் அயியா தமது குழுவின் முதல் கோலைப் போட்டார். இடைவேளையின்போது 1=0 எனும் கோல் கணக்கில் கானா முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கி ஏறத்தாழ ஏழு நிமிடங்களில் கானாவின் இரண்டாவது கோல் புகுந்தது.
இந்த கோலையும் எகிர் அயியா போட்டார். இதையடுத்து, இந்தியா பதிலடி கொடுக்க போராடியது. ஆனால் வலிமைமிக்க கானா ஆட்டக்காரர்களை இந்திய வீரர்களால் தாண்டிச் செல்ல முடியவில்லை. ஆட்டம் முடிய ஏறத்தாழ நான்கு நிமிடங்கள் இருந்தபோது கானாவின் ரிச்சர்ட் டான்சோ அனுப்பிய பந்து இந்திய கோல் காப்பாளரைக் கடந்து சென்று வலைக்குள் புகுந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து இந்திய வீரர்கள் மீள்வதற்குள் அடுத்த ஒரு நிமிடத்தில் கானா அதன் நான்காவது கோலைப் போட்டது. சொந்த மண்ணில் நடைபெறும் இப்போட்டியில் ஓர் ஆட்டத் திலாவது வெற்றி பெற விழைந்த இந்தியாவுக்கு இறுதியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
கானா வீரரிடமிருந்து (நடுவில்) பந்தைப் பறிக்கக் கடுமையாகப் போராடும் இந்திய வீரர்கள். படம்: இந்திய ஊடகம்

