லண்டன்: ஆட்டங்களுக்கு முன்பு மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகி ஜோசே மொரின்யோ எத்தகைய வியூகத்தை வகுப்பார் என்பதை முன்னுரைப்பது காற்பந்து நிபுணர்களுக்கும் சவால்மிக்க காரியம் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் முக்கிய ஆட்டங் களின்போது யாரும் எதிர்பார்க்காத உத்திகளைக் கடைப்பிடித்து வெற்றி பெறுவது மொரின்யோவின் தனிச் சிறப்பு என்று செல்சியின் முன்னாள் அணித் தலைவர் ஜான் டெரி முன்பு ஒருமுறை கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட இதே மாதத்தில் லிவர்பூலை அதன் ஆன்ஃபீல்ட் விளையாட்டரங் கத்தில் யுனைடெட் சந்தித்தது. அந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தில் லிவர்பூல் ஆதிக்கம் செலுத்தியபோதிலும் கோல் போடமுடியாமல் போனது.
இதற்கு மொரின்யோ அமைத்த வலிமைமிக்க தற்காப்பு அரண் தான் காரணம் எனப் பாராட்டுகள் குவிந்தன. கோல்கள் போட லிவர்பூல் கொண்டிருந்த திட்டங்களை மொரின்யோவின் வியூகம் தவிடுபொடியாக்கியது. இவ்விரு குழுக்கள் இன்று மீண்டும் ஆன்ஃபீல்ட் விளை யாட்டரங்கத்தில் சந்திக்கின்றன. இதில் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்பின் வியூகத் துக்கும் மொரின்யோவின் வியூ கத்துக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முக்கியமான ஆட்டங் களில் எதிரணியின் பலம், பலவீனங்களை அடிப்படையாகக் கொண்டு துணிச்சலுடன் வியூ கத்தை மாற்றி அமைக்கும் திறமை மொரின்யோவுக்கு உண்டு. அதே சமயம் தமது வீரர்களின் பலம், பலவீனம் அறிந்து அதற்கு ஏற்ப அவர் திட்டமிடுவது காற்பந்து உலகின் பாராட்டைப் பெற்று வருகிறது.
மொரின்யோ. படம்: ஏஎஃப்பி

