பாபர் ஆஸம் சதம்; பாகிஸ்தான் வெற்றி

பாபர் ஆஸம் சதம்; பாகிஸ்தான் வெற்றி

1 mins read
facc02a2-ca17-4464-bd79-eb3d9fc40284
-

துபாய்: இலங்கைக்கு எதிராக துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி யை 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இலங்கைக்கும் பாகிஸ் தானுக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டன. அந்த டெஸ்ட் தொடரில் இலங்கை 2=0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து, ஐந்து ஒருநாள், மூன்று டி20 போட்டிகளிலும் இந்த இரு அணிகளும் மோதுகின்றன. இந்நிலையில், இரு அணிகளுக் கிடையிலான முதல் ஒருநாள் போட்டி, துபாய் அனைத்துலக கிரிக்கெட் மைதானத்தில் நடை பெற்றது.

பூவா தலையாவில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து, பாகிஸ்தான் பந்தடிப்பைத் தொடங் கியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபகர் ஸமானும், அஹ்மத் ஷெசாத்தும் களமிறங்கினர். ஷெசாத் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து, பாபர் ஆஸம் களமிறங்கினார். ஸமான் - அஸாம் ஜோடி சிறப்பாக விளையாடியது. ஸமான் 43 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆஸமுடன் முகம்மது ஹஃபீஸ் ஜோடி சேர்ந்தார். ஹஃபீஸ், 32 ஓட்டங்கள் எடுத்து நடையைக் கட்டினார்.

இலங்கை பந்துவீச்சாளர் அனுப்பும் பந்தைப் பறக்கவிடும் பாகிஸ்தானின் நட்சத்திரப் பந்தடிப்பாளர் பாபர் ஆஸம். படம்: ஏஎஃப்பி