2வது சுற்றில் ஜெர்மனி, பிரேசில், ஈரான், ஸ்பெயின்

2வது சுற்றில் ஜெர்மனி, பிரேசில், ஈரான், ஸ்பெயின்

1 mins read

கொச்சி: இந்தியாவில் நடைபெறும் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு ஜெர்மனி, பிரேசில், ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன. கொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் 'சி' பிரிவில் உள்ள ஜெர்மனியும் கினியும் மோதின. இதில் ஜெர்மனி வாகை சூடியது. கினியை ஜெர்மனி 3=1 எனும் கோல் கணக்கில் தோற் கடித்தது. ஜெர்மனியின் அணித் தலைவர் ஜான் பியட்டி அர்ப், நிக்கலஸ் குன், சவெர்டி செட்டின் ஆகியோர் ஜெர்மனியின் கோல் களைப் போட்டனர். வலை நோக்கி கினி பலமுறை பந்தை அனுப்பியபோதிலும் அக் குழுவால் ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது. இதன் விளைவாக இரண்டு வெற்றிகளுடன் ஆறு புள்ளிகள் பெற்று 'சி' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த ஜெர்மனி, அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.

அதே பிரிவில் நடந்த மற்றோர் ஆட்டத்தில் ஈரான் அணி 3=0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிக்காவைத் தோற்கடித்தது. ஆட்டம் தொடங்கி 25 நிமிடங்களுக்குள் ஈரானுக்கு இரண்டு பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன. இரண்டு பெனால்டி வாய்ப்புகளையும் அது கோலாக் கியது. பதிலடி கொடுக்க முயன்ற கோஸ்டா ரிக்காவின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 'சி' பிரிவில் ஒன்பது புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த ஈரான் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.