புதுடெல்லி: உலகக் கிண்ணக் காற்பந்தில் 17 வயதிற்குட்பட் டோருக்கான தொடரில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், மெக் சிகோ, ஹோண்டுராஸ், ஈராக் குழுக்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 'ஈ' பிரிவில் ஹோண்டுராஸ் குழுவை பிரான்ஸ் 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஜப்பான் - நியூ கலிடோனியா மோதிய ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது. 'எஃப்' பிரிவில் ஈராக்கிற்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4-0 என வெற்றி பெற்றது. இன்று தொடங்கவுள்ள நாக்-அவுட் சுற்றில் கொலம்பியா - ஜெர்மனி, பராகுவே - அமெரிக்கா மோதவுள்ளன.
பிரான்ஸ், இங்கிலாந்து வெற்றி
1 mins read

