காலிறுதிக்குள் அமெரிக்கா, ஜெர்மனி

காலிறுதிக்குள் அமெரிக்கா, ஜெர்மனி

1 mins read

புதுடெல்லி: இந்தியாவில் நடை பெறும் 17 வயதுக்குட்பட்டோருக் கான உலகக் கிண்ணக் காற் பந்துப் போட்டியின் காலிறுதிக்கு அமெரிக்காவும் ஜெர்மனியும் தகுதி பெற்றுள்ளன. காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தில் இவ்விரு குழுக்களும் கோல் மழை பொழிந்தன. கொலம்பியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 4-0 எனும் கோல் கணக்கில் ஜெர்மனி வாகை சூடியது. கொலம்பியாவின் தற்காப்பில் ஏற்பட்ட குளறுபடியைப் பயன்படுத்தி ஜெர்மனி அதன் கோல்களைப் போட்டது. ஜெர்மனியின் அணித் தலை வரும் நட்சத்திரத் தாக்குதல் ஆட்டக்காரருமான யான் ஃபியேட்டே ஆட்டத்தின் 7வது, 65வது நிமிடங்களில் கோல் போட்டார்.

யான் பிஸ்ஸேக் 39வது நிமிடத்திலும் ஜான் யெபோவா 49வது நிமிடத்திலும் ஜெர்மனிக் காக கோல் போட்டு கொலம்பி யாவின் கதையை முடித்து வைத் தனர். முதல் சுற்றில் போட்டியை ஏற்று நடத்தும் இந்தியாவை 2-1 எனும் கோல் கணக்கில் கொலம்பியா வீழ்த்தியிருந்தது.