அபுதாபி: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் வென்றுள்ளது. இதற்கு முன்பு இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இலங்கையிடம் 2=0 என்ற கணக்கில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது. ஐந்து ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் துபாயில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 83 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், நேற்று முன் தினம் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் பந்தடித்தது. தொடக்க ஆட்டக் காரர்களாகக் களமிறங்கிய ஃபகர் ஸமான் 11 ஓட்டங் களிலும் அகமது ஷெசாத் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந் தனர். அதைத்தொடர்ந்து, பாபர் ஆஸமும் முகம்மது ஹஃபீசும் களமிறங்கினர். ஹஃபீஸ் 8 ஓட்டங்களில் நடையைக் கட்டி னார். ஆஸம் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இலங்கையின் விக்கெட்டைச் சாய்த்துக் கொண்டாடும் பாகிஸ்தானின் ஹசன் அலி (நடுவில்). படம்: ஏஎஃப்பி

