கொச்சி: இந்தியாவில் நடைபெறும் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதிக்கு முந்திய ஆட்டங் களில் பிரேசில், கானா, ஸ்பெயின், ஈரான், மாலி, இங்கிலாந்து ஆகிய குழுக்கள் வெற்றி பெற்றுள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் 3=0 எனும் கோல் கணக்கில் ஹோண்டுராஸ் குழுவை எளிதில் வீழ்த்தியது. கோல்கத்தாவில் நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் பிரேசில் மோதும். மற்றோர் ஆட்டத்தில் போட்டியில் முதல்முறையாகப் பங்கெடுக்கும் நைஜர் குழுவை 2-0 எனும் கோல் கணக்கில் கானா தோற்கடித்தது. கானாவுக்கு நைஜர் கடும் சவாலாக அமைந்தது. இரண்டு குழுக்களும் மாறி மாறி தாக்கு தல்கள் நடத்தின.
இந்நிலையில், இடை வேளைக்குச் சில வினாடிகள் மட்டுமே இருந்தபோது கானா வுக்குப் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் அது கோல் போட்டது. அதனை அடுத்து, ஆட்டம் முடியும் கட்டத்தில் கானா அதன் இரண்டாவது கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்தது. இங்கிலாந்துக்கும் ஜப்பா னுக்கும் இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. பெனால்டி ஷூட்அவுட் முறை யில் இங்கிலாந்து 5=3 எனும் கோல் கணக்கில் வென்றது.

