செல்சி - ரோமா சமநிலை

செல்சி - ரோமா சமநிலை

1 mins read
42c97068-6b7d-49fe-ac34-3450ad8eebb7
-

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற் பந்துப் போட்டியில் இங்கிலாந்தின் செல்சியும் இத்தாலியின் ரோமாவும் நேற்று அதிகாலை மோதிய ஆட்டம் 3=3 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இரு குழுக்களும் நெருங்கி உள்ளன. ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் விளை யாட்டரங்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் செல்சியின் முதல் கோலை டேவிட் லுவிஸ் போட்டார். அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் ஈடன் ஹசார்ட் செல்சியின் இரண்டாவது கோலைப் போட்டார்.

இனி வெற்றி நிச்சயம் என்று நம்பிக்கையுடன் இருந்த செல்சிக்கு அடுத்த மூன்று நிமிடங்களில் பதிலடி கொடுத்தது ரோமா. ரோமாவின் அலெக்சாண்டர் கொலரோவ் அனுப்பிய பந்து மின்னல் வேகத்தில் செல்சி கோல்காப்பாளரைக் கடந்து சென்று வலைக்குள் புகுந்தது. இ டை வே ளை யி ன் போ து ஆட்டம் 2-1 எனும் கோல் கணக்கில் இருந்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கியதும் இரு குழுக்களுக்கும் இடையிலான கடும் போட்டி தொடர்ந்தது. இந்நிலையில், ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் ரோமாவின் போஸ்னிய நட்சத்திர வீரர் எடின் செக்கோ கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார். அவர் கோல் போட்ட விதம் விளையாட்டரங்கத்தை அதிர வைத்தது.

செல்சியின் இரண்டாவது கோலைப் போடும் ஈடன் ஹசார்ட் (வலது). பந்து வலைக்குள் செல்வதைத் தடுக்க ரோமா கோல்காப்பாளர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. படம்: ஏஎஃப்பி