சிங்கப்பூர்: கத்தார் குழுவிடம் 3-1 என சிங்கப்பூர் லயன்ஸ் குழு தோல்வி அடைந்தாலும் விளையாட்டாளர்களிடையே நல்ல முறையிலான போட்டித்தன்மை உள்ளது என்று கூறியுள்ளார் குழு வின் தலைமை பயிற்றுவிப்பாளர் வி.சுந்தரமூர்த்தி. இதனால் விளையாட்டாளர் களைத் தேர்ந்தெடுப்பது கடின மாக இருக்கும் எனத் தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார். வரும் செவ்வாய்க்கிழமை துர்க்மேனிஸ்தான் குழுவிற்கு எதிராக ஆசியக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் களமிறங்கு கிறது சிங்கப்பூர். 'இ' பிரிவில் கடைசி இடத்தில் இருக்கும் சிங்கப்பூர் குழுவிற்கு இப்போட்டியில் தோல்வியைத் தவிர்க்க வேண்டியது அவசிய மான ஒன்றாக உள்ளது.
கத்தார் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல்களை விட்டுக்கொடுத்ததால் தோல்வி அடைய நேர்ந்தது. இல்லையென்றால் அந்த ஆட்டம் சமநிலையில் முடிந்திருக் கும் என்றார் சுந்தரம். தனது குழுவின் தாக்குதல் ஆட்டம் சுந்தரத்திற்கு மகிழ்ச்சி அளித்தாலும் அவர்களின் தற் காப்பு ஆட்டம் அவருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கிடையே, நவம்பர் 14ஆம் தேதி பஹ்ரேன் குழுவிற்கு எதி ரான ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்திற்கு முன்னர் சிங் கப்பூர் குழு அனைத்துலக நட்பு முறை ஆட்டம் ஒன்றில் விளையாட உள்ளது. தேசிய விளையாட்டரங்கில் நவம்பர் 9ஆம் தேதி நடை பெறவுள்ள இந்த ஆட்டத்தில் லெபனான் குழுவை எதிர்கொள் கிறது சிங்கப்பூர்.

