சிங்கப்பூரில் நடைபெற்று வரும் அனைத்துலக குத்துச்சண்டை போட்டியில் சிங்கப்பூரரான முகமது ரிட்வான் வெற்றி பெற்றுள்ளார். சூப்பர் ஃபெதர்பேய்ட் எடை பிரிவில் அவர் நமிபியாவின் நட்டேனியல் செபஸ்டியனை வீழ்த்தி முதல்முறையாக பட்டத்தை வென்றார். இதற்கு முன்பு தென்கிழக்கு ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் மூன்று முறை வெண்கலப் பதக்கங்கள் வென்ற்றுள்ளார். மொத்தம் 12 சுற்றுகளைக் கொண்ட 'ரோர் ஆஃப் சிங்கப்பூர் 3' எனும் அனைத்துலகக் குத்துச்சண்டைப் போட்டியில் 29 வயது ரிட்வான் அனைத்து சுற்றுகளையும் வென்றுள்ளது இதுவே முதல்முறை. அதே போல இதுதான் செபஸ்டியன் பெற்ற முதல் தோல்வியும் ஆகும். ரிட்வான் ஏற்கெனவே கடந்த மே மாதம் 'யுனிவர்சல்' குத்துச்சண்டை கழகத்தின் உலக சூப்பர் ஃபெதர்வெய்ட் பட்டத்தை வென்றுள்ளார்.
சன்டெக் சிட்டியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பட்டம் வென்ற சிங்கப்பூரர் முகம்மது ரிட்வான் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

