காற்பந்து: இந்திய ரசிகர்கள் சாதனை

காற்பந்து: இந்திய ரசிகர்கள் சாதனை

1 mins read

புதுடெல்லி: ஃபிஃபா எனப்படும் உலகக் காற்பந்து சம்மேளனம் நடத்தும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண காற்பந்து வரலாற்றில் இந்தியா சாதனை படைக்கக் கூடும். முதன்முறையாக இந்தப் போட்டித் தொடர் இவ்வாண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. டெல்லி, கோல்கத்தா, கோவா, கேரளாவில் உள்ள விளையாட்டு அரங்கங்குகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கிரிக்கெட் போட்டியில் மூழ்கி இருக்கும் இந்திய ரசிகர்கள், காற்பந்திற்கு ஆதரவு கொடுப் பார்களா என்ற கேள்வியைச் தவிடுபொடியாக்குவது போல அனைத்து ஆட்டங்களிலும் ரசிகர் கூட்டம் அலைமோதியது.

இதுவரை ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட ரசிகர்கள் இந்தப் போட்டித் தொடரை விளையாட்டு அரங்குகளுக்குச் சென்று பார்த்துள்ளனர். இப்படியே சென்றால் பார்வையாளர் எண்ணிக்கையில் இந்தியா சாதனை படைக்கக் கூடும். கடந்த 1985ஆம் ஆண்டு நடந்த முதல் 17 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியை 1,230,976 பேர் பார்த்தனர். அதுவே இதுவரை ஆக அதிகமான எண்ணிக்கை யாக இருந்து வந்தது. இதுவரை 17 வயதிற்குட்பட்டோருக்கான காற்பந்து போட்டியை ஒரு மில்லியன், 7 ஆயிரத்து 396 பேர் ரசித்துள்ளனர். இன்னும் காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.