மார்கோ: இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வயதுக்குட்பட்டோருக் கான உலகக் கிண்ணக் காற் பந்துப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவை 4-1 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து புரட்டி எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அரையிறுதி ஆட்டத் துக்குத் தகுதி பெற்றுள்ளது. லிவர்பூலின் ஜூனியர் குழு வுக்காக விளையாடும் ரியான் புரூஸ்டர் மூன்று கோல்களைப் போட்டு இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் தொடங்கிய இங்கிலாந்தின் கோல் மழை இறுதி வரை அமெரிக்காவைத் திக்குமுக்காட வைத்தது.
ஆட்டம் தொடங்கி 15 நிமிடங்களுக்குள் இங்கிலாந்து இரண்டு கோல்கள் போட்டு முன்னிலை வகித்தது. இங்கிலாந்தின் மின்னல் வேகத் தாக்குதல்களுக்கு அமெ ரிக்க வீரர்களால் ஈடுகொடுக்க முடியாமல் போனது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மாலியும் கானாவும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தை 2=1 எனும் கோல் கணக்கில் மாலி கைப்பற்றி அரையிறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது. கொட்டும் மழையில் நடை பெற்ற இந்த ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் மாலி அதன் முதல் கோலைப் போட்டு முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் 61வது நிமிடத் தில் கானாவின் கோல்காப்பாளர் செய்த பிழையைப் பயன்படுத்தி மாலி அதன் இரண்டாவது கோலைப் போட்டது. 70வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கானா ஆறுதல் கோல் போட்டது.

