அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் முன்னேறும் கோஹ்லி

அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் முன்னேறும் கோஹ்லி

1 mins read

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசிய இந் திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, அதிக சதமடித்த வீரர் கள் பட்டியலில் பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளினார். தனது 200வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய கோஹ்லி தனது 31வது சதத்தைப் பதிவு செய்தார். இந்த சதம் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்து 2வது இடத்தில் இருந்த ஆஸ் திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கை அவர் முந்தினார். மொத்தம் 375 போட்டிகளில் விளையாடிய பாண்டிங் 30 சதம் அடித்து இருந்தார். அதே போல் 49 சதம் அடித்து முதல் இடத்தில் உள்ள தெண்டுல்கர் 463 போட்டி களில் விளையாடியுள்ளார்.

அவரைத் பின்னுக்குத் தள்ள கோஹ்லி இன்னும் 19 சதம் விளாசவேண்டும். 28 வயதான கோஹ்லி 2008ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். இலங்கை அணிக்கு எதிராக அதிகபட்சமாக 8 சதம் விளாசி உள்ளார். இந்திய மண்ணில் 13 சதங்களைப் பதிவு செய்துள்ளார் அவர். இதற்கிடையே, நியூசிலாந் துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு பேசிய கோஹ்லி, "கடைசி 14 ஓவர்களில் நாங்கள் 20-30 ஓட்டங்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். "இன்னும் ஒரிருவர் நன்றாக பந்தடித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பந்தடிப்பாளர்க ளிடமிருந்து இன்னும் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன். " நியூசிலாந்து வீரர்கள் எங்க ளது சுழற்பந்து வீச்சையும் வேகப் பந்து வீரர்களையும் சரியான முறையில் கையாண்டனர்," என் றார்.