ஆஸ்டின்: கார் பந்தய வீரர் லூவிஸ் ஹேமில்டனின் அமெரிக்க எஃப்1 வெற்றியைத் தொடர்ந்து, அவர் இவ்வாண்டுக்கான எஃப்1 வெற்றியாளர் பட்டத்தை வெல்லும் தூரத்தில் உள்ளார். நேற்று முன்தினம் அமெரிக்கா வின் ஆஸ்டின் நகரில் நடை பெற்ற கார் பந்தயத்தில் வெட்டல் இரண்டாம் இடத்தையும் கிமி ரைக்கோனன் மூன்றாவது இடத் தையும் பிடித்தனர். இதனால் 66 புள்ளிகள் முன்னி லையில் முதலிடத்தில் உள்ளார் மெர்சிடிஸ் வீரர் லூவிஸ் ஹேமில் டன்.
இன்னும் மூன்று சுற்றுகள் எஞ்சி உள்ள நிலையில், வெற்றி யாளர் பட்டத்தை வெல்வதற்கு ஹேமில்டனுக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகி றது. அவ்வாறு வெற்றி பெற்றால், அது ஹேமில்டனின் நான்காவது எஃப்1 வெற்றியாளர் பட்டமாக இருக்கும். இவ்வார இறுதியில் நடைபெற வுள்ள மெக்சிகோ கார் பந்தயத்தில் ஒருவேளை வெட்டல் வெற்றி பெற்றால், அடுத்தடுத்து பிரேசில் மற்றும் அபுதாபியில் நடைபெற வுள்ள பந்தயங்களில் வெட்டல், ஹேமில்டன் இடையே கடும் போட்டி நிலவும்.
அமெரிக்க கார் பந்தயத்தின் வெற்றியைக் கொண்டாடும் மெர்சிடிஸ் வீரர் ஹேமில்டன். படம்: ஏஏஃப்பி