வெம்பிளே: வெம்பிளே மைதானத் தில் நடந்த ஆட்டத்தில் லிவர்பூல் குழுவின் மோசமான தற்காப்பு ஆட்டத்தைத் தங்களுக்குச் சாதக மாகப் பயன்படுத்திக் கொண்ட டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டமொன்றில் லிவர் பூலை எதிர்கொண்ட ஸ்பர்ஸ் வீரர்கள் வெம்பிளே ஆடுக ளத்தைத் தங்களது சொந்த மைதா னமாக உணரத் தொடங்கிவிட் டார்கள் என்றார் அதன் நிர்வாகி மௌரிசியோ போக்கெட்டினோ.
டோட்டன்ஹம்மின் முதல் இரண்டு கோல்களும் லிவர்பூல் குழுவின் மோசமான தற்காப்பால் விழுந்தவையாகும். எதிரணி ஆட்டக்காரர் உதைத்த பந்தை லிவர்பூலின் டேயான் லோரென் தற்காத்து விளையாடத் தவறியதால் கேரி கேன் அதை ஸ்பர்சின் முதல் கோலாக மாற்றினார். நான்காவது நிமிடத்தில் முதல் கோலை விட்டுக் கொடுத்த லிவர் பூல், 12வது நிமிடத்திலும் அதே தவற்றைச் செய்ய 2 கோல்கள் முன்னிலை பெற்றது ஸ்பர்ஸ். இந்தக் கோலையும் லோரென் தடுக்கத் தவறியதால், சன் ஹியூங் மின் அதைக் கோலாக மாற்றினார்.
லிவர்பூல் கோல் காப்பாளர் மின்யோலே தடுக்கத் தவறியதால் கேரி கேன் உதைத்த பந்து டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவின் நான்காவது கோலானது. படம்: ஏஎஃப்பி

