லண்டன்: மான்செஸ்டர் யுனை டெட் காற்பந்துக் குழுவின் முன் னாள் ஆட்டக்காரரான ரையன் கிக்ஸ் காலியாக உள்ள எவர்ட்டன், லெஸ்டர் சிட்டி நிர்வாகிப் பதவி மீது குறிவைத்துள்ளார். கடந்த ஞாயிறன்று நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத் தில் 5=2 என்ற கணக்கில் ஆர்சனலிடம் எவர்ட்டன் தோல்வி கண்டது. இதனால், 'ரெலிகேஷன்' எனப்படும் கடைசி மூன்று இடங் களுக்குள் எவர்ட்டன் தள்ளப் பட்டது. இதையடுத்து, அக்குழுவின் நிர்வாகிப் பொறுப்பிலிருந்து ரோனல்ட் கூமன் நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்தப் பருவத்தில் பதவி பறிக்கப்பட்ட மூன்றாவது இபிஎல் நிர்வாகி கூமன். முன்னதாக, கிரிஸ்டல் பேலஸ் குழுவிலிருந்து ஃபிராங்க் டி போரும் லெஸ்டர் சிட்டியிலிருந்து கிரெய்க் ஷேக்ஸ் பியரும் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், 18ஆம் இடத்தில் இருக்கும் எவர்ட்டன், 14ஆம் இடத்திலுள்ள லெஸ்டர் ஆகிய குழுக்களில் ஏதேனும் ஒன்றுக்கு நிர்வாகியாகச் செயல்பட கிக்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். "இரு பருவங்களுக்குமுன் லெஸ்டர் வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றியது. எவர்ட்டன், அருமை யான வரலாற்றைக் கொண்டுள்ள அற்புதமான குழு. இத்தகைய குழுக்களின் நிர்வாகியாக இருக்க நான் விரும்புகிறேன். அதே நேரத் தில், என்னைப்போல இன்னும் பலர் அந்தப் பதவிக்கு ஆசைப்பட லாம்," என்றார் 43 வயதான கிக்ஸ். 1990 முதல் 2014 வரை யுனைடெட்டுக்காக 973 போட்டி களில் களமிறங்கிய கிக்ஸ், 13 முறை இபிஎல் பட்டத்தை வென் றுள்ளார். 2014ல் யுனைடெட் நிர்வாகிப் பொறுப்பிலிருந்து டேவிட் மோயெஸ் நீக்கப்பட்டபின் இடைக்காலமாக நான்கு ஆட்டங் களுக்கு அக்குழுவின் நிர்வாகி யாக கிக்ஸ் பணியாற்றினார்.
மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் முன்னாள் சகாப்தம் ரையன் கிக்ஸ். படம்: ராய்ட்டர்ஸ்

