சிறந்த வீரராக ரொனால்டோ

சிறந்த வீரராக ரொனால்டோ

2 mins read
43635ee0-68e3-402f-8d03-eca0fcc6bc51
-

லண்டன்: போர்ச்சுகல் அணித் தலைவரும் ரியால் மட்ரிட் காற் பந்துக் குழுத் தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, இவ்வாண்டுக்கான அனைத்துலக காற்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) சிறந்த காற்பந்து வீரர் விருதை வென்றார். இந்த ஆண்டில் இதுவரை 44 போட்டிகளில் விளையாடியிருக்கும் ரொனால்டோ 48 கோல்களை அடித்துள்ளார். கடந்த பருவத்திற் கான ஸ்பானிய லா லீகா பட்டத் தையும் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை யும் ரியால் மட்ரிட் குழு கைப் பற்றியதில் ரொனால்டோவுக்கு பெரும்பங்குண்டு.

கடந்த ஜூன் 3ஆம் தேதி கார்டிஃப் நகரில் நடந்த சாம்பி யன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ரியால் குழு 4=1 என்ற கோல் கணக்கில் யுவென்டஸ் குழுவைத் தோற்கடித்து கிண்ணத்தை வென் றது. அந்த ஆட்டத்தில் இரு கோல்களை அடித்திருந்தார் ரொனால்டோ. சிறந்த வீரருக்கான போட்டியில் பார்சிலோனா நட்சத்திர வீரரும் அர்ஜெண்டினா அணித் தலைவரு மான லயனல் மெஸ்ஸி, பிஎஸ்ஜி குழுவிற்காக ஆடிவரும் பிரே சிலின் நெய்மார் ஆகியோரும் இடம்பெற்று இருந்தனர். லண்டன் பலேடியம் அரங்கில் நடந்த விருது நிகழ்ச்சியில் முன் னாள் அர்ஜெண்டினா சகாப்தம் டியேகோ மரடோனா, ரொனால்டோ வுக்கு சிறந்த வீரருக்கான விருதை வழங்கிச் சிறப்பித்தார்.

இந்த விருதை இவர் வென்றது இது ஐந்தாவது முறை. இருந்தாலும் ரொனால்டோவின் வெற்றி தாகம் இன்னும் தீரவில்லை. "ஏழு முறை வெல்ல விரும்பு கிறேன். ஐந்து முறை வென்றதே நல்ல விஷயம்தான். ஆனாலும் ஏழு எனக்கு ராசியான எண் என்பதால் இன்னும் இருமுறை சிறந்த வீரருக்கான கிண்ணத்தை ஏந்தினால் சிறப்பாக இருக்கும்," என்றார் ரொனால்டோ. ரியால் குழுவின் நிர்வாகியாகச் செயல்பட்டு வரும் முன்னாள் பிரெஞ்சு நட்சத்திரமான ஸினடின் ஸிடான் சிறந்த நிர்வாகிக்கான விருதைக் கைப்பற்றினார். சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை அடுத்தடுத்து இருமுறை வென்று சாதனை படைத்த முதல் நிர்வாகி ஸிடான் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஃபிஃபாவின் சிறந்த அணியில் ரொனால்டோ உடன் செர்ஜியோ ராமோஸ், டோனி குரூஸ், லூக்கா மோட்ரிச், மார்செலோ என மேலும் நான்கு ரியால் வீரர்களுக்கு இடம் கிடைத் தது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஃபிஃபா சிறந்த வீரர் விருதைத் தட்டிச் சென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்