நிரந்தர நிர்வாகியாக விரும்பும் அன்ஸ்வர்த்

நிரந்தர நிர்வாகியாக விரும்பும் அன்ஸ்வர்த்

1 mins read
c0d90ac4-d5f5-48f7-bcf2-2c9a5866c936
-

எவர்ட்டன்: எவர்ட்டன் காற்பந்துக் குழுவின் நிரந்தர நிர்வாகியாக விரும்புவதாக டேவிட் அன்ஸ்வர்த் தெரிவித்துள்ளார். ரோனல்ட் கூமன் எவர்ட்டன் குழுவின் நிர்வாகிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அக்குழுவின் 'கேர் டேக்கர்' எனும் தற்காலிக பொறுப்பில் நிய மிக்கப்பட்டார் 44 வயது டேவிட் அன்ஸ்வர்த். 23 வயதுக்குட்பட்டோருக்கான எவர்ட்டன் குழுவின் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வரும் இவர், எவர்ட்டன் குழுவின் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரராகவும் இருந்து உள்ளார். மேலும் இதற்கு முன்னர் எவர்ட்டன் நிர்வாகியாக இருந்த ரொபர்ட்டோ மார்டினஸ் வெளியே- றிய போதும் டேவிட் அன்ஸ்வர்த் தற்காலிக நிர்வாகியாக நியமிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதி காலை நடந்த செல்சிக்கு எதிரான ஆட்டத்தை டேவிட் அன்ஸ்வர்த் தின் கீழ் விளையாடியது எவர்ட் டன். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எவர்ட்டன் போன்ற பிரமாதமான குழுவை நிர்வகிக்க யார்தான் விரும்பமாட்டார்கள்," என்று கூறினார் டேவிட் அன்ஸ் வர்த். முன்னதாக, முன்னாள் மேன்யூ விளையாட்டாளர் ரையன் கிக்சும் எவர்ட்டன் குழுவின் நிர்வாகியாக விருப்பம் தெரிவித்து இருந்தார்.

எவர்ட்டன் குழுவின் தற்காலிக நிர்வாகியாகப் பொறுப்பேற்றுள்ள டேவிட் அன்ஸ்வர்த். படம்: ஏஎஃப்பி