வெற்றி தேடித் தந்த பிராவோ

வெற்றி தேடித் தந்த பிராவோ

1 mins read
95964742-dee4-41e7-a15b-8221171d105c
-

மான்செஸ்டர்: லீக் கிண்ணக் காற்பந்தில் மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவை கோல் எது வும் போடவிடாமல் தடுத்து விளை யாடிய உல்ஃப்ஸ் குழு பெனால்டி ‌ஷூட்அவுட் முறையில் தோல்வி அடைந்தது. எதிரணியின் மூன்று கோல் களைத் தடுத்தாடிய சிட்டியின் கோல்காப்பாளர் கிளாடியோ பிராவோ தன் அபார ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார். உல்ஃப்ஸ் வீரர் ஹெல்டர் கோஸ்டா உதைத்த பந்தையும் பிரைட் எனோபக்ஹரே உதைத்த பந்தை இரண்டு முறையும் பிராவோ தடுத்துவிட்டார். அதே போல் உல்ஃப்ஸ் குழுவும் சிட்டி குழுவை கோல் போடவிடாமல் சிறப்பாக தடுத்து விளையாடியது. எனவே இப்பருவத்தில் கோல் எதுவும் இல்லாமல் முடிந்த சிட்டி குழுவின் முதல் ஆட்டமாக இது அமைந்தது. கோல் எதுவும் போடாமல் ஆட் டம் சமநிலை கண்டதால் பெனால்டி ‌ஷூட்அவுட் முறை பின்பற்றப்பட்டது. அப்போதும் உல்ஃப்ஸ் குழு வின் இரண்டு கோல்களைத் தடுத்துவிட்டார் பிராவோ.

உல்ஃப்ஸ் வீரர் உதைத்த பந்தைக் கோலாக விடாமல் தடுத்து விளையாடினார் மான்செஸ்டர் சிட்டியின் கோல்காப்பாளர் கிளாடியோ பிராவோ. படம்: ராய்ட்டர்ஸ்