புனே: நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளை- யாடிய நியூசிலாந்து அணியால் 50 ஓவர் களில் 9 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. நிக் கோலஸ் அதிகபட்சமாக 42 ஓட்ட மும், கிராண்ட்ஹோம் 41 ஓட்டங் களும் எடுத்தனர். புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும், பும்ரா, சகால் தலா 2 விக்கெட்டும் எடுத் தனர். பின்னர் விளையாடிய இந் திய அணி 46 ஓவர்களில் 4 விக் கெட் இழப்புக்கு 232 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தவான் 68 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 64 ஓட்டங்களும் எடுத்தனர். "இந்தப் போட்டியில் புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோரின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந் தது. ஆடுகளம் மெதுவாக இருந் தது. இதை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி விக்கெட்டு களை வீழ்த்தி தாக்கத்தை ஏற் படுத்தினர். இருவரும் எங்களது டாப் பவுலர்கள் ஆவார்கள். இதே போல பீல்டிங்கும் நன்றாக அமைந் தது," என இந்திய அணித் தலை வர் விராத்கோஹ்லி பாராட்டினார். மாலையில் ஆடுகளம் மெது வாகவும், இரவில் பந்தடிப்புக்கு ஏற்றதாகவும் இருந்தது. தவானின் பந்தடிப்பு உண்மையிலேயே மிகவும் அபாரமாக இருந்தது. அவர் பந்துகளை அடித்த விதம் அருமை யாக இருந்தது. அவர் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினார். மிகவும் இக்கட்டான நேரத் தில் தினேஷ் கார்த் திக் ஓட் டங்களைச் சேர்த்- தது சிறப்பானது.

