பூப்பந்துத் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்- றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் எச். எஸ்.பிரனோய், கொரியாவின் லீ ஹியூனை எதிர்த்து விளை- யாடினார். இப்போட்டியின் முதல் சுற்றை 21=15 என்ற புள்ளிக் கணக்கில் பிரனோய் கைப்பற்றி னார். அடுத்த சுற்றிலும் சிறப்பாக விளையாடிய பிரனோய் இரண் டாவது சுற்றையும் 21-19 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் 21-15, 21-19 என்ற நேர் செட்களில் எச்.எஸ். பிரனோய் வெற்றி பெற்றார். இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் - தாய்லாந்து வீரர் கோசித் பெட்பிரதாப் பலப் பரீட்சை செய்தனர். இப்போட்டி- யில், சாய் பிரனீத் 21-13, 21-23, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் - ஜெர்மனி வீரர் பேபியன் ரோத் இடையேயான மற்றொரு முதல் சுற்றுப் போட்டியிலிருந்து பேபியன் ரோத் காயம் காரணமாக விலகி- னார். இதையடுத்து ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், டென்மார்க்கின் லைன் ஜார்ஸ்ஃ- பெல்டை எதிர்கொண்டார். இப் போட்டியில் 21-14, 11-21, 21-10 என்ற செட்கணக்கில் சாய்னா வெற்றி பெற்றார். இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்தியா- வின் பி.வி.சிந்து - ஸ்பெயினின் பீட்ரிஸ் கொரல்ஸ் ஆகியோர் மோதினர். இப்போட்டி யில் 21-19, 21-18 என்ற நேர் செட்களில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.2017-10-27 06:00:00 +0800

