நெய்மாருக்கு ஓர் ஆட்டம் தடை

நெய்மாருக்கு ஓர் ஆட்டம் தடை

1 mins read

பாரிஸ்: மார்சே காற்பந்துக் குழுவிற்கு எதிராகக் கடந்த வார இறுதியில் நடந்த லீக் 1 ஆட்டத்தில் சிவப்பு அட்டை பெற்ற பிஎஸ்ஜி குழுவின் பிரேசில் வீரர் நெய்மார் ஓர் ஆட்டத்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்றிரவு நீஸ் குழுவிற்கு எதிராக நடக்க இருந்த ஆட்டத்தில் அவர் பங்கேற்க முடியாமல் போனது. அத்துடன், இந்தப் பருவத் தில் இன்னொரு முறை நெய்மார் சிவப்பு அட்டை பெறும் பட்சத்தில் அவருக்கு இன்னோர் ஆட்டத்திலும் பங்கேற்க முடியாமல் போகும் வகையில் 'ஓர் ஆட்டத் தொங்கு தடை'யும் விதிக்கப் பட்டுள்ளது. பிஎஸ்ஜி-மார்சே குழுக்கள் மோதிய ஆட்டம் 2-2 எனச் சமனில் முடிந்தது. அந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜிக் காக அற்புதமான ஒரு கோலைப் போட்ட நெய்மார், ஆட்டம் முடி யும் தறுவாயில் அடுத்தடுத்து இரு மஞ்சள் அட்டைகளைப் பெற்றதால் சிவப்பு அட்டை காட் டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்தப் பருவத்தின் தொடக் கத்தில் பார்சிலோனாவிலிருந்து $264 மி. விலைக்கு பிஎஸ்ஜிக்கு இடமாறியிருந்தார் நெய்மார்.